நிலக்கோட்டை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு.. கல்லூரி மாணவர் கைது,..

நிலக்கோட்டை அருகே உள்ள செங்கட்டான் பட்டி கிழக்கு தெரு சேர்ந்தவர் பழனிமுத்து மகன் ரமேஷ் வயது  25  இவர் நிலக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எட் படித்து வருகிறார் இவருக்கும் தன்னுடன் படித்த 25 வயதான பட்டதாரி பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.. இந்த நிலையில் திருமண ஆசைகாட்டி ஆத்தூர் காமராஜர் அணை பருதிக்கு அழைத்து சென்ற ரமேஷ் அந்த பெண்னை கற்பழித்தாக கூறப்படுகிறது. இதற்கிடையே தன்னை திருமணம் செய்யுமாறு அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரமேஷ் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் துணை ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரித்து வருகிறார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .