மழை வேண்டி ஏழு கிராம மக்கள் வழிபாடு..-வீடியோ செய்தி..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மழை வேண்டி அய்யனார் கோயிலில் ஏழு கிராமத்தினர் ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்தனர்.

திருப்புல்லாணி அருகே வண்ணான்குண்டு பகுதியில் பூரண நாச்சியார் பொற்கொடி நாச்சியார் உடனாகிய ஸ்ரீ வையகுண்ட அய்யனார் கோயில் உள்ளது இக்கோயிலில் புதுவலசை, வண்ணான்குண்டு, மேதலோடை உள்பட அப்பகுதியில் உள்ள 7 கிராமத்தினர் பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் ஆடு, கோழிகள் பலியிட்டும் வழிபட்டனர். வான் மழை பொழிந்து நல்ல விளைச்சல் காணவும், ஊரணிகள் மற்றும் குளங்கன் தண்ணீர் பெருகவும் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.