இராமேஸ்வரத்தில் போலிசார் கண் முன்னரே 2 லட்சம் வழிப்பறி..

இராமேஸ்வரம் வந்த சுற்றுலா பயணிகளிடம் போலீசார் கண் எதிரே ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தைச் சேர்ந்த சிலர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்றிரவு ராமேஸ்வரம் வந்தனர். அக்னிதீர்த்தக் கடலில் தீர்த்தமாட இன்று காலை காத்திருந்தனர்.

அப்போது அவர்கள ஒரு கை பையில் வைத்திருந்த ஏழு மொபைல் போன்கள், நான்கு ஏடி.எம்.கார்டுகள் மற்றும் ரொக்கப் பணத்தை அங்கு பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த போலீசார் கண் எதிரே மர்ம நபர் வழிப்பறி செய்து கொண்டு ஓட்டம் பிடித்தார். ஓட்டம் பிடித்த ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..