நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்…

நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் 12/09/18 இன்று காலை 10 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மனுநீதி முகாமில் ஆண்கள்,பெண்கள், முதியோர்,
மாற்றுத்திறனாளிகள்,அரசியல் கட்சியினர்,சமூக ஆர்வலர்கள்,பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், அனைத்து அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் கல்வி, பொதுசுகாதாரம், மருத்துவம், விவசாயம், என பல துறைகளை உள்ளடக்கி சிறப்பாக தலைமை உரை நிகழ்த்தினார்.

பின்பு பொதுமக்களின் இருக்கைக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு துறைகள் சார்ந்த நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உபகரணங்கள், உரம், சலவை தொழிலாளி ஒருவருக்கு துணி தேய்க்கும் பெட்டி மற்றும் முதியோர் உதவித்தொகை, ஸ்மார்ட் ரேசன்கார்டு மற்றும் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பயனாளிகள் நன்றி கூறினர்.

தகவல்:அபுபக்கர்சித்திக், செய்தி தொகுப்பு
அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்
( பூதக்கண்ணாடி மாத இதழ் )கீழை நியூஸ்