கீழக்கரை – ஏர்வாடி சாலையில் விபத்து, ஒருவர் பலி..

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே டூவீலர் மற்றும் ஆட்டோ  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் குருநாயக்கனூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.

இன்று (12/09/2019) மதியம் இவர் ஏர்வாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோவுடன் நேருக்கு நேர் மோதியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து ஏர்வாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..