Home செய்திகள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஊரக வளர்ச்சி அலுவலரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு – வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஊரக வளர்ச்சி அலுவலரை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு – வீடியோ செய்தி..

by ஆசிரியர்

வத்தலகுண்டு  ஓன்றியம் கோம்பைபட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது, இந்த விளையாட்டு போட்டியினை தொடங்கி வைக்க வந்த ஊரக வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா அவர்களை ஊர் பொது மக்கள் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தும் பல நாட்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்தில் செய்யபட வில்லை, குடிநீர்,தெரு விளக்குகள், சாக்கடை நீர் வெளியே செல்ல வாய்க்கால், 100 நாள் வேலை போன்ற எந்தவித வசதிகளும் இந்த கிராமத்தில் இல்லை எனறும் மக்கள் குமுறினர்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று ஊரக வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கலைந்து செல்லும் போது கிராம மக்கள் கூறியதாவது,“ இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தொடர்ந்து கேட்டு வருகிறோம் ஆனாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை, இனியும் தாமதித்தால், விரைவில் கிராம மக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்திக்க உள்ளோம்” என்று கூறினார்கள்,

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!