உயர் நீதிமன்ற ஊழியர் 4 மாதங்களாக மாயம்…

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இந்தியன் நார்வே திட்டம் மண்டபம் படகு கட்டும் தளத்தில் தச்சராக பணியாற்றினார். இத்திட்ட காலம் முடிவடைந்ததையடுத்து இராமநாதபுரம் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலக உதவியாளராக பணியமர்த்தப்பட்ட லோகநாதன் உடல் நலக்குறைவால் இறந்தார். கருணை அடிப்படையில் திருமணமாகாத இவரது மகன் பிரகலாதனுக்கு (வயது 46 ) உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 30 பணி முடித்து வீடு திரும்பிய இவர் மே 1 தொழிலாளர் தின பொது விடுமுறைக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. மூன்று மாதங்களாக பணிக்கு வராததால் துறை ரீதியான விளக்கம் கோரி பிரகலாதன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதன்படி பல இடங்களில் தேடியும் பிரகலாதனன கண்டுபிடிக்க இயலாமல் போனது. இது குறித்து அவரது சகோதரி லதா புகாரின் பேரில் மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..