Home செய்திகள் திருப்புல்லாணி பகுதியில் பூமி விரிசல் அடைந்ததை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்!

திருப்புல்லாணி பகுதியில் பூமி விரிசல் அடைந்ததை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம்!

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பூமி விரிசல் அடைந்தது .அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் இதுகுறித்து ஓஎன்ஜிசி     எரிவாயு கிணறுகளால்   ஏற்பட்ட பாதிப்பா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ    கட்சியினர் திருப்புல்லாணியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

இது குறித்து எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது, இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் 1992 ஆம் ஆண்டு முதல் 15க்கும் மேற்பட்ட எரிவாயு கிணறுகள் மூலம் ஓஎன்ஜிசி   எரிவாயு எடுத்து வரும் நிலையில் தற்போது திருப்புல்லாணி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான காஞ்சிரங்குடி கொட்டக்குடி ஆறு போன்ற பகுதிகளில் புதிதாக மேலும் 21 எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி    துவங்கி உள்ளது. இந்நிலையில் திருப்புல்லாணி அருகே உள்ள வளையனேந்தல்,  இந்திராநகர் பகுதியில் திடீரென பூமியில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விரிசல் சுமார் 5 இன்ச்    அகலம் கொண்டதாகவும் உள்ளது. அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே காலில் ஏதோ ஒன்று ஊர்வது போன்ற உணர்வுடன் பூமியில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியில் வசித்த குடும்பத்தினர் கையில் கிடைத்த பொருள்களை எடுத்துக்கொண்டு ஆடு மாடுகளுடன் அந்த பகுதியை விட்டு வெளியேறி சாலைகளில் தங்கியுள்ளனர் பின்னர் அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் இதற்கான காரணம் என்ன என்பதை உறுதியாகச் சொல்லாததால்   அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மறுத்து வருகின்றனர் அவர்களுக்கு எங்களது எஸ்டிபிஐ   கட்சியின் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கினோம் . திருப்புல்லாணி பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டது முதல், இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வந்த நிலையில் தற்போது மிக அதிக அளவில் பூமியில் ஏற்பட்ட விரிசல் அப்பகுதி மக்களை கவலையடையச் செய்துள்ளது. இதற்கு அப்பகுதியில் புதிய எரிவாயு கிணறுகளுக்காக  ஓஎன்ஜிசி மேற்கொள்ளும் பணிகளே  முக்கிய காரணமாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். ஆகவே திருப்புல்லாணி பகுதிகளில் எரிவாயு எண்ணெய் கிணறுகளுக்காக ஓஎன்ஜிசி  மேற்கொள்ளும் பணிகளை கைவிட்டு மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு பெரும் சேதம் ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பிரச்சினையின் தீவிரத்தை அரசு அதிகாரிகள் உணர்ந்து கொள்வதற்காகவும் பாதுகாப்பான சூழலில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காகவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  தற்போது ஏற்பட்டுள்ள மக்களின் அச்சத்தைப் போக்க உடனடி நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஜுலை 30     முதல் ஆகஸ்ட் 8 வரை மாபெரும் கையெழுத்து இயக்கத்தை நாங்கள் நடத்துகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் த்லைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்ட துணைத் தலைவர் சோமு, நகர் தலைவர் அப்துல் ரகுமான், நகர் செயலாளர் முகம்மது ஹனிபா, தொழிற்சங்க நிர்வாகி அகமது முஸ்தாக் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!