Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…

இராமநாதபுரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வேதாளை கிராமத்தில் இன்று (21.07.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் அவர்கள் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.  

 

​மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்  பேசியதாவது: மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் விதமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.  அந்தவகையில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திடும் விதமாக நமது மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதற்கான ஒரு ஊராட்சிக்கு தலா ரூ.20,000/- வீதம் மொத்தம் ரூ.85.80 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

​விளையாட்டுப் போட்டிகளைப் பொறுவத்தவரையில் கபாடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளும், வட்டு எரிதல், குண்டு எரிதல், நீளம் தாண்டுதல், 100மீ, 200மீ, 400மீ ஓட்டப்பந்தயம் என பல்வேறு போட்டிகள் ஆண்கள்ää பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகின்றது. இப்போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கணைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதன் மூலம் கிராமப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே சகோதரத்துவம் அதிகரிக்கின்றது.  இப்போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இளைஞர்கள் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்துகொண்டு நமது மாவட்த்திற்கு பெருமை சேர்த்திடவேண்டும்.

​இதுதவிர, வேதாளைப் பகுதிகளில் உள்ள கிராமப் பொதுமக்கள் நலனுக்காக இப்பகுதிகளில் புதிதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்குத் தேவையான இடம் தேர்வு செய்யும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. அதேபோல இராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது என பேசினார்.  

​இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா,  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.பிராங்க் பால் ஜெயசீலன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.ராஜா உட்பட அரசு அலுவலர்கள், கிராமப் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

 

 

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!