கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை!

பழனி மலைக்கோயிலில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு வழக்கிற்காக, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அந்த சிலை இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.

பழனி முருகன் கோவிலில், மூன்றரை அடி உயர ஐம்பொன்னால்ஆனஅபிஷேக மூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அங்கிருந்து சிலை அகற்றப்பட்டு, இரட்டைப் பூட்டு அறையில் வைக்கப்பட்டது. அபிஷேகமூர்த்தி சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக, ஐம்பொன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு செல்கின்றனர். இதையொட்டி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் தற்போது சிலை ஒப்படைக்கப்பட்டது.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..