Home செய்திகள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு, மனிதாபிமானமற்ற செயல் – மேதா பட்கர் குற்றச்சாட்டு, வீடியோ பதிவு…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்திய துப்பாக்கிச் சூடு, மனிதாபிமானமற்ற செயல் – மேதா பட்கர் குற்றச்சாட்டு, வீடியோ பதிவு…

by ஆசிரியர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ள சமூகவியல் செயற்பாட்டாளர் மேதாபட்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது 1988 ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் எத்தனை தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே சுற்றுச்சூழல் விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து வருவதாக புகார் தெரிவித்தார்.
தற்போது உள்ள தமிழக அரசிற்கு மக்களின் பிரச்சினைகள் கூட தெரியவில்லை என குற்றம்சாட்டியுள்ள மேதா பட்கர் இந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை என தெரிவித்தார்.
நர்மதா அணை கட்டும் பணியின்போது மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட மோடி தற்போது பிரதமராக உள்ள மோடி அதே நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த வன்முறையை காரணம் காட்டி 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துடு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!