Home செய்திகள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 1.86 கோடி மதிப்புள்ள புதிய மருத்துவ உபகரணங்கள்..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 1.86 கோடி மதிப்புள்ள புதிய மருத்துவ உபகரணங்கள்..

by ஆசிரியர்
இராமநாதபுரம்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (16.06.2018) பொது சுகாதாரத் துறையின் சார்பாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சி.டி.ஸ்கேன் மையம், செயற்கை சுவாச கருவிகள் தாய்பால் அவங்க ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார்.
அதைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன், தற்போதைய ஆளும் அரசு செய்து வரும் பணிகளை விளக்கி கூறியதுடன், தற்சமயம் அரசு மருத்துவமனையில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரம், செயற்கை சுவாச கருவில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் அளிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.  அதே போல் தாய்ப்பால் வங்கி மூலம் பிறந்த குழந்தைக்கு உடனடியாக தாய்பால் ஊட்ட முடியாத தாய்மார்களுக்கு உதவும் வகையில் இவ்வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்ததார்.
இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மறறும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்படும். புட்டிப்பாலைக் காட்டிலும் தாய்ப்பாலில் உள்ள நன்மைகள் இதன்மூலம் விளக்கப்பட்டு வரும் இந்த புதிய நடைமுறை தமிழ்நாடு அரசின் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் . இதுதவிர இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) மரு.சகாயஸ்டீபன்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தகோ.அண்ணாதுரை, மருத்துவமனை கண்கானிப்பாளர் மரு.ஜவகர்லால்,  நிலைய மருத்துவர் மரு.ஞானக்குமார் உட்பட அரசு மருத்துவர்கள் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!