Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சேவைகளால் சிகரங்கள் தொடும் கீழக்கரை இளைஞர்…

சேவைகளால் சிகரங்கள் தொடும் கீழக்கரை இளைஞர்…

by ஆசிரியர்

கீழக்கரையில் வேலை தேடும் சாமானிய மனிதன் முதல் வேலை தேடும் பட்டதாரிகள் வரை நாடிச் செல்லும் நிறுவனம்தான் “கீழக்கரை கிளாசிஃபைட்”, உச்சரிக்கும் பெயர்தான் எஸ்.கே.வி சேக்.

இவர் அமீரகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் தொடங்கிய “கீழக்கரை கிளாசிஃபைட்”, நிறுவனம், பின்னர் அதையே முழு நேர சேவை நோக்குடன் கூடிய தொழிலாக மாற்றி இன்று வேலை சார்ந்த பல சேவைகளை செய்து வருகிறார். இவரின் சேவையை கவுரவிக்கும் வண்ணம் கடந்த வருடம் அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையும் விருது வழங்கி கவுரவித்தது.  அதை தொடர்ந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியும் காந்தி வோர்ல்ட் ஃபவுண்டேஷன் இணைந்து சமுதாயத்தை மாற்ற போகும்  “100 இளைஞர்களில் ஒருவராக” தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரின் சேவையின் மணிமகுடத்துக்கு முத்தாக திருச்சி ஆரோக்கியா அறக்கட்டளை சார்பாக “சிறந்த நிறுவனம்/சிறந்த நபர்” என்ற அடிப்படையில் “சிகரம் 2018” விருதுக்கு இவருடைய சமுதாய சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கான விழா திருச்சியில் 29/04/2018 அன்று ரத்தினவேல் தேவர் மன்றத்தில் மாலை 04.00 மணிமுதல் 09.00 மணி வரை நடைபெற உள்ளது.  இந்த நிகழ்ச்சிக்கு சினிமாத்துறையைச் சார்ந்த பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்க உள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!