ஆசிஃபாவிற்கு நீதி வேண்டி SDPI கட்சி சார்பாக இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

சமீபத்த்தில் பாலியில் வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட   ஆசிபாவிற்கு நீதிவேண்டி இராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சி சார்பாக நடத்தப்பட்ட இப்பேரணி இராமநாதபுரம் சின்னக்கடை 4 முக்கு ரோடு பகுதியிலிருந்து துவங்கி சந்தை கடையில் இன்று மாலை (24/04/2018) ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த பேரணியில் 8 வயது குழந்தை ஆசிபாவை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையில்  கண்டன உரையை SDPI  கட்சி மாநில  பொது செயலாளர் அப்துல் ஹமீது வழங்கினார்.
மேலும் இந்த கண்டன பேரணியில்  குழந்தைகள், பெண்கள், ஆண்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாசிசத்துக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..