இராமநாதபுரத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

இராமநாதபுரம் மாவட்டம் 29வது  சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக   இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் இரவில் ஒளிரும் இருவண்ண ஸ்டிக்கர்களை ஒட்டி துவக்கி வைத்தார்.  பின்னர் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார்.
இதனை தொடர்ந்து அரசு புறநகர் பணிமனையில் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனத்தில்  விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
இந்நிகழ்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர் சரவணன்,  இராமேஸ்வரம் கிளை மேலாளர் பாலமுருகன் மற்றும் கிளை மேலாளர்கள் பத்ம குமார், தமிழ்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..