இஸ்லாமியா பள்ளியில் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..

இராமநாதபுரம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் இன்று (22/04/2018) மாலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா ஆறாம் வகுப்பு மாணவி ஃபஜீஹா மற்றும் ஆயிஷா ராபிஃஹா ஆகியோரின் கிராத்துடனும் UKG மாணவி ஃபாத்திமா சானாவின் வரவேற்புரையுடனும் தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே முகைதீன் இபுராஹிம் தலைமை வகித்தார், நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினாராக மாவட்ட நீதிபதி கயல்விழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளும், பட்டங்களும் வழங்கினார். இந்நிகழ்வின் பட்டமளிப்பு உரையை UKG மாணவி அர்சியா பர்வீன் வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறுவர்களின் கலை நிகழ்ச்சி,  யா தைபா என்ற அரபு நிகழ்ச்சி, கதம்பம் நிகழ்ச்சி, அரேபிய நடனம் மற்றும் தமிழேன்டா என்ற மாணவர்கள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் இறுதியாக ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜன்னத் ரிஜ்னா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மேபெள் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.