அரசுப் பள்ளிகளும் சிறந்த பள்ளிகள்தான், கிடைத்த விருதுகளே எடுத்துக்காட்டு..

தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை தர முடியும் என்ற மன நிலையில் இருக்கும் வேளையில், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, தொடர்ந்து இரண்டாவது வருடமாக சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளது.

இவ்விருதை பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை தமிழரசி மற்றும் உடன் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இராமநாதபுரம் வட்டம் ஊராட்சி , கடலாடி ஒன்றிய நரசிங்க் கூட்டம் தொடக்கப் பள்ளி, தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
.