நரக வழி பாதையாக மாறி வரும் மதுரை 4 வழி பாதை…

கீழக்கரையில் இருந்து மதுரைக்கு இராமநாதபுரம் வழியாக செல்லும் பாதை 4 வழி அரசாங்பாகத்தால் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து இன்று வரை வேலை நடந்த வண்ணமே உள்ளது. அப்பணிகள் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் சாலை வேலை முடிந்தால் பணம் வசூல் செய்வதற்கான சுங்க சோதனை சாவடி பணிகள் மட்டும் சத்திரக்குடி அருகே அதி வேகமாத் தொடங்கப்பட்டுள்ளன.

நான்கு வழி சாலைக்கென பணிகள் தொடங்கியதால், மக்களும் அவ்வழியே செல்வதை தவிர்த்து பெரும்பாலானோர் 30 கிலோ மீட்டர் தூரம் அதிகமுள்ள ஏர்வாடி சாயல்குடி வழியாக செல்ல தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் தற்காலிகமாக போடப்பட்டுள்ள மாற்று பாதையில் எந்த ஓரு பாதுகாப்பும் இல்லாத சூழலே உள்ளது. அப்பாதைகளில் எதிர்பாராத விதமாக சாலை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கனரக வாகனங்கள் பிற வாகனங்கள் செல்லும் வழியில் நுழைவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் என்ற எண்ணத்தாலே மக்கள் தவிர்த்து விடுகிறார்கள்.

இத்திட்டம் முதலில் 937 கோடி செலவில் 10 மீட்டர் அகலத்துடன் மதுரை – பரமக்குடி 4 வழி சாலை என திட்டமிட்டு நிதி ஒதுக்கி வேலை ஆரம்பமானது, பின்னர் அத்திட்டம் 4 வழி சாலை என மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் அதுவே பாம்பன் பாலம் வழியாக தனுஷ்கோடி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பாதையில் உள்ள TAKE DIVERSION என்ற அவலம் என்று நீங்கி மக்கள் பயணிக்கும் நிலை உருவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

2017ல் முடிக்க வேண்டிய பணிகள், 2020லாவது முடியுமா என்று வேலை முடிந்தால்தான் தெரியும்.