கமுதி அருகே கலவரம்…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதகுளம் கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரண்டு கிராம மக்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதல்லில் 6 பேர் காயம் அடைந்தனர்.

மானாமதுரை அருகே உள்ள கிலான்காட்டூர் கிராமத்தை சேர்ந்த 25 பேர் விரதகுளத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வமான கருப்பண்ணசாமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்ததுள்ளனர். அச்சமயத்தில் அங்கு வந்த மற்ற பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது.

இந்த கோஷ்டி மோதலில் விரதகுளத்தை சேர்ந்த திருப்பதி, சக்தி, முத்துச்சாமி, மங்கையர்கரசி, சித்திரைச்சாமி, சூரியகுமார் ஆகியோர் காயம். இச்சம்பவத்தை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.