இராமநாதபுரம் பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்திய கொலு விழா…

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்து சமுதாயத்தினர் கொலு வைத்து வணங்குவது வழக்கம். இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமே வணங்கும் கடவுளர்களின் அவதார நோக்கங்களை சமுதாயத்திற்கு விளக்குவதாகும்.

இராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகடமி பள்ளியில் இந்த வருடம் கொலு வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதன் மூலம் மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றியும், கல்வி முறை பற்றியும், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கொலு பொம்மைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த கொலு நிகழ்வு கடந்த 17 வருடமாக பள்ளியில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.