கீழக்கரை தாலுகாவில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்..

கீழக்கரையில் இன்று (22-08-2017) தாலூகா அலுவலர்கள், ஆசிரியர் கூட்டமைப்பு ( ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ) மத்திய அரசுக்கு இணையான சம்பள உயர்வு, 2003 ம் வருடத்திற்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு ஓய்வு ஊதியம் பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி வேண்டும் உட்பட்ட பல கோரிக்கைகளை வழியுறுத்தி, 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டனர்.

இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் பல ஊர்களில் இருந்து கீழக்கரைக்கு அரசு அலுவலகம் சார்ந்த பணிக்கு வரும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆகையால் இன்று அரசு சார்ந்த வேலைக்கு வர இருக்கும் பொதுமக்கள் நிலவரத்தை அறிந்து கொண்டு வந்தால் நல்லது.