சாக்கடை நீரால் தோரணம் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரசு மருத்துவமனை..

இராமநாதபுரத்தில் பிராதான சாலையில் அமைந்து உள்ளது அரசு மருத்துவமனை. இம்மருத்துவமனைக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் வருவார்கள். இங்கு சுகாதாரம் என்பது எப்பொழுதுமே ஒரு கேள்விக் குறிதான்.

ஏற்கனவே சுகாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இம்மருத்துவமனையை தற்சமயம் தனியார் வணிக வளாகத்தில் இருந்து வழிந்தோடி வரும் கழிவு நீர் மருத்துவமனைக்கு தோரணம் கட்டியுள்ளது. இக்கழிவு நீரால் இங்கு வரும் நோயாளிகளுக்கு மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் பல அரசு அதிகாரிகள் கடந்து செல்லும் இப்பாதையில் இந்தக் கழிவுநீர் அவலம் கண்ணில் படாதது ஆச்சரியம்தான்.