வெளிநாடு மோகம்… மதி மயக்கியது… உயிர் பறி போனது..

கீழக்கரை ஏர்வாடி தெற்குத் தெருவைச் சார்ந்த முகம்மது இஸ்மாயில் மகன் ஹமீஸ் இபுராஹிம் (19) குடும்பத்தினர் வெள்நாடு செல்ல வேண்டாம் என்று கண்டித்ததால் மனமுடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் தகப்பனார் ஏர்வாடியில் தனியார் விடுதி ஒன்று நடத்தி வருகிறார்.  இவர் கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்பு முடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.  அக்கரைக்கு இக்கரைப் பச்சை என்பது போல் வெளிநாட்டில் உள்ள சகோதரர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து வாழ்கையை ஆரம்பம் செய்ய ஆர்வமாக உள்ளனர்.  ஆனால் மறுபுறம் வெளிநாட்டில் வாழ்க்கை அதுவும் முக்கியமாக வளைகுடா வாழ்வின் கஷ்டங்கள் புரியாமல் வெளிநாட்டில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்று வாழ்கையை முடித்துக் கொள்வது மிகவும் வேதனையான விசயமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.