நோயாளிகள் உண்டு… மருத்துவர்கள் இல்லை..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டினம் ஊராட்சியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் பல நோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். ஆனால் வரும் பொது மக்களுக்கு மருத்துவர் இல்லலை என்ற நிரந்தர பதிலே கிடைத்து வருகிறது.

இப்பகுதியில் முறையான, நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.  இது சம்பந்தமாக உள்ளூர் மக்களும், சமூக அமைப்புகளும் கோரிக்கை வைத்த வண்ணம்தான் உள்ளார்கள். ஆனால் இப்பிரச்சினைக்கு விடிவுகாலம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்சமயம் இப்பிரச்சினையை இராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் கவனத்திற்கும், அரசு நிர்வாகத்தின் கவனத்திற்க்கும் உடனடியாக நிரந்தர மருத்துவர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும், SDPI கட்சியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.