இராமநாதபுரத்தில் மாட்டிறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் 02-06-2017 அன்று மாட்டிறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கலக்டெர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் விடுதலை சேகரன் வகித்தார். முன்னிலை மாவட்ட துணைச்செயலாளர் தேனமுதன், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிச்செயலாளர் த.அற்புதக்குமார், திருவாடானை சட்டமன்ற தொகுதிச்செயலாளர் பழனிக்குமார். இசுலாமிய சனநாயகப் பேரவை மாவட்ட அமைப்பாளர் ரியாஸ்கான் உட்பட கட்சியின் பொருப்பாளர்கள் அணைவரும் கலந்துக்கொண்டனர்.

மேலும் இசுலாமிய சனநாயகப்பேரவை மாவட்ட துணைச் செயலாளர் யாசின், கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது யூசுப், முற்போக்கு மாணவர்கழக மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், திருப்புல்லாணி ஒன்றியச் செயலாளர் ஷாஜகான், மண்டபம் ஒன்றியச் செயலாளர் ஆருமுகம், கல்வி பொருலாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட துணைச்செயலாளர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டர்கள்.