நலம் விசாரிப்பில் வேற்றுமையில் ஒற்றுமையான இஸ்லாமிய இயக்கங்கள்..

கடந்த 21/04/2017 வெள்ளிக்கிழமை காலை திடீரென உடல் நலம் பாதிக்கபட்ட தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னையில் உளள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்பு இறுதயம் சம்பந்தப்பட்ட சிகிச்சை மேற்கொள்ளபட்டு அன்று மாலையே திருப்பினார். இந்நிலையில் நேற்று மாலை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தங்கும் விடுதியில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் , கூட்டமைப்பின் ஒருங்கிணைபாளர் ஹனிஃபா , வெல்பேர் பார்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிக்கந்தர் , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் சேக் அன்சாரி , மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் அப்துல் சமது, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை தலைவர் ஜலாலுத்தீன் , சமரசம் பத்திரிக்கை துணை ஆசிரியர் வி.எஸ் அமீன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

மேலும் சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப இந்தியா மாநில தலைவர் தெஹ்லான் பாக்கவி மற்றும் பலர் தொலைபேசியின் வாயிலாக உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர் உடன் மனித நேய ஜனநாய கட்சியின் பொருளாளர் ஹாருன் ரஷித் இருந்தார்.

2 Comments

  1. சில விடயங்களை எழுத நினைத்தாலும், இடம் பொருள் ஏவல் கருதி எழுத முடியவில்லை.

    ஆணவம், அகம்பாவம் எனும் ஈகோ நம் சமுதாயத்தை விட்டு மறையாத வரை ஒன்னும் செய்ய முடியாது.

    -கீழை ஜமீல் முஹம்மது.

  2. ஒரு தனி மனித நலனுக்காக ஓன்று சேர்ந்த இயக்கங்கள், சமுதாயப் பிரச்சினைகளுக்கும் ஒன்று சேர்ந்தால் இன்னும் பல காரியங்களை எளிதில் வெற்றி கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.