Home செய்திகள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும், இருந்த போதும் பொங்கலையும் கொண்டாட வேண்டும் என அதிகாலை 5 மணிக்கே கோலமிட்டு காவல்நிலையத்தை அலங்கரித்த மகளீர் காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்

பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும், இருந்த போதும் பொங்கலையும் கொண்டாட வேண்டும் என அதிகாலை 5 மணிக்கே கோலமிட்டு காவல்நிலையத்தை அலங்கரித்த மகளீர் காவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்

by mohan

தை திருநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்,இந்நிலையில் காவலர்களின் பணி தற்போது மதுரை மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மதுரை மாவட்டத்தில் உள்ள 90 சதவீத காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சூழலில் பாதுகாப்பு பணிக்கும் செல்ல வேண்டும் பொங்கலையும் கொண்டாட வேண்டும் என எண்ணிய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மகளீர் காவல்நிலைய பெண் காவலர்கள் அதிகாலை 5 மணிக்கே காவல் நிலையம் முன்பு ஒன்றிணைந்து வண்ண கோலமிட்டு அலங்கரித்து தைத்திருநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினர். கடமையிலும் தமிழரின் பன்பாட்டுடன் ஒன்றிணைந்த தமிழர் திருநாளை கொண்டாடிய பெண் காவலர்களுக்கு பொதுமக்களின் பாராட்டு குவிந்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com