Home செய்திகள் மயானபாதை இல்லாததால் நெல்வயலில் இறங்கி தூக்கிச்சென்று அடக்கம் செய்யும் அவலம்

மயானபாதை இல்லாததால் நெல்வயலில் இறங்கி தூக்கிச்சென்று அடக்கம் செய்யும் அவலம்

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மருத்துவாம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காலனிப் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானபாதை இல்லாததால் கரடுமுரடான பாதையிலும், மதகு தண்ணீர் செல்லும் கால்வாயிலும், விவசாயநிலத்தில் சாகுபடி செய்துள்ள நெல்வயலில் உள்ள சேற்றில் இறங்கி சடலத்தை சுமந்துகொண்டு எடுத்துச் செல்லும் அவலநிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவாம்பாடி கிராமத்தில் மூதாட்டி சக்குபாய் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவரது சடலத்தை உறவினர்கள் உரிய மயானபாதை இல்லாததால் விவசாய நெல்வயலில் சேற்றில் இறங்கி சேறும்சகதியில் சடலத்தை உறவினர்கள் சுமந்து சென்றனர். அப்போது சடலத்துடன் சேற்றில் சிக்கி கீழே விழுந்து எடுத்துசெல்லும் அவலநிலை ஏற்ப்பட்டது.மயானபாதை கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எடுத்துக்கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராமமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.சடலத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்ல மயானபாதை அமைத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!