Home செய்திகள் இரயில் என்ஜின் கோளாறு காரணமாக.. இராமேஸ்வரம் வழி தடத்தில் பல மணி நேரம் தாமதம்..பயணிகள் அவதி..

இரயில் என்ஜின் கோளாறு காரணமாக.. இராமேஸ்வரம் வழி தடத்தில் பல மணி நேரம் தாமதம்..பயணிகள் அவதி..

by ஆசிரியர்

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று (23/04/2019) காலை 6:50 மணிக்கு பாசஞ்சர் ரயில் கிளம்பியது. இந்த ரயில் 8:30 மணிக்கு வந்த போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சாமர்த்தியமாக ரயிலை இயக்கிய டிரைவர் மண்டபம் முகாம் நிலையத்தில் பயணிகள் இறங்க காலை 9:35 மணியளவில் நிறுத்தினார். ரயிலை மீண்டும் இயக்கியபோது இன்ஜின் நகரவில்லை. டிரைவரின் நீண்ட நேர முயற்சி பலனளிக்கவில்லை.

இது குறித்து கார்டு மூலம் மதுரை கோட்ட ரயில் இயக்க கட்டுப்பாட்டாளர், தொழில்நுட்ப உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, ராமேஸ்வரத்தில் இருந்து மாற்று இன்ஜின் மண்டபம் முகாம் அனுப்பப்பட்டது. அங்கு காலை 9:35 மணி முதல் மதியம் 12 மணி வரை நிறுத்தப்பட்ட ரயில், 12:15 மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில் திருச்சியில் காலை 6 மணிக்கு கிளம்பி 12:30 மணிக்கு ராமேஸ்வரம் வர வேண்டிய பாசஞ்சர் ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உச்சிப்புளி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் 12: 25 மணிக்கு மண்டபம் வந்தது. இங்கிருந்து 12: 35 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றது. இன்ஜின் கோளாறால் மண்டபத்தில் நிறுத்தி வைத்த மதுரை – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மதியம் 1:05 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றது. 11: 20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் , 2 : 45 மணி நேரம் தாமதமாக மதியம் 2 : 05 மணிக்கு கிளம்பிச் சென்றது. 3 இவ்விரு ரயில்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!