Home செய்திகள் சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வருவாய்த்துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைப்பு..

சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வருவாய்த்துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைப்பு..

by Askar

சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் வருவாய்த்துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைப்பு..

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருவாய்த்துறை சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முறைகள் குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்ததை அடுத்து சுரண்டை காமராஜர் காய்கனி மார்க்கெட் பகல் 1 மணி வரை திறந்துள்ளது.

இந்நிலையில் வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் ஹரிஹரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆலோசனையின் படி சுரண்டை காமராஜர் வணிக வளாக காய்கறி சந்தையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக இருப்பதால் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கவும் அறிவுறுத்த ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விழிப்புணர்வும், காவல் துறை அறிவிப்புகளையும் தொடர்ந்து வணிக வளாகத்திற்க்கு வந்து செல்லும் மக்களுக்கு கொடுக்க இயலும் என மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் ஹரிஹரன் அறிவுறுத்தலின்படி காவல்துறை மற்றும் ஆர்ஐ மேற்பார்வையில் காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகள் பெற்றுச் செல்ல அறிவுரைகள் வழங்கியும் அதனை செயல்படுத்தும் விதமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டும் வருகிறது. இதன் மூலம் சமூக விலகலை கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனதெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!