Home செய்திகள் குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..

குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு..

by Abubakker Sithik

கனமழை எச்சரிக்கை எதிரொலி: குற்றாலம் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் குளிக்க தடை; மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவி மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டத்திற்கு 17.05.2024, 18.05.2024, 19.04.2024, 20.05.2024 மற்றும் 21.05.2024 ஆகிய தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் (Orange alert) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!