Home செய்திகள் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க தென்காசி மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க தென்காசி மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..

by Abubakker Sithik

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி தெற்கு திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தததின் பேரில், தென்காசி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இருப்பினும் மேம்பாலம் பணிநடைபெறும் இடத்தில் சாலையின் இருபுறமும் தார்சாலை அமைக்கப்படாததால் சாலையானது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள், அவசர ஊர்திகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்வோர் இச்சாலையில் செல்லும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே துரித நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் சர்வீஸ் சாலையை தார்சாலையாக அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!