Home செய்திகள் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்வு மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்வு மையங்களாக விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்..

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்வு மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்வு மையங்களாக விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்..

by Askar

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தும் பட்சத்தில் தேர்வு மையத்தை மாணவர்கள் பயிலும் பள்ளிகளை தேர்வு மையங்களாக விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.. கொரோனா வைரஸ் மனிதகுலத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் மார்ச் 24 தேதி முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து மே 3ம் தேதி வரை நீட்டித்து நடைமுறையில் உள்ளநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளது, பெற்றோர்கள் கல்வியாளர்கள் பல அமைப்புகள் ரத்து செய்ய கேட்டுக் கொண்டனர் , தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்லும் முக்கியத் தேர்வு என்பதால் ரத்து செய்ய முடியாது என்று அறிவித்து தேர்வை ஒத்திவைத்துள்ளது ,

இதற்கிடையில் மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி ஊரடங்கு முடிந்தவுடன் வெளிடப்படும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடைபெறும் என்று தெரிவித்து இருக்கின்றார் ,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை விரிவு படுத்த வேண்டும் அதாவது சமுக விலகலை கடைப்பிக்க வேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் இருக்கின்றோம் ஆதலால் மாணவர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியார்களின் பாதுகாப்பை உறிதிப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வை நடத்தவேண்டும் ஏன் இதனை தெரிவிக்கின்றேன் என்றால் பல மையங்களில் ஐந்து ஆறு பள்ளி மாணவர்கள் ஒரே மையத்தில் எழுதுவார்கள் இதனால் சமுக விலகலை கடைப்பிக்காமல் போக வாய்ப்புள்ளது போக்குவரத்து சிரமமும் உள்ளது ஆதலால் தேர்வு மையங்களை விரிவுப்படுத்தி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பயிலுகின்ற பள்ளிகளிலேயே தேர்வுகளை எழுத அனுமதித்து உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!