Home செய்திகள் பதனி.. பதனி… மெட்ரோ பயணத்தையும்; மழை பிரச்சரத்தையும் ஓரம் கட்டிய தமிழிசை.

பதனி.. பதனி… மெட்ரோ பயணத்தையும்; மழை பிரச்சரத்தையும் ஓரம் கட்டிய தமிழிசை.

by mohan

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதனீர் குடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுடன் நேரடி பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மக்களுடன் எடுக்கும் புகைப்படங்களை தக்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடுகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு கிராம மக்களால் கொடுக்கப்பட்ட பதனீரை சுவைத்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.தமிழிசை பாஜகவில் இருப்பதால் அவருக்கு பல எதிர்ப்புகள் தமிழகத்தில் இருக்கிறது. இருப்பினும் தமிழிசையை கலாய்ப்பவர்கலும் அவரை அக்கா என்று அன்போடு அழைப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படி இருக்க தமிழிசையின் இந்த புகைப்படம் விமர்சங்களுக்கு ஆளானாலும் ஸ்டாலின் மெட்ரோ பயணத்தையும், சீமான் மழையில் நனைந்தபடி வேலூர் தொகுதியில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தையும் ஓரம் கட்டிவிட்டது.

ஜெ:அஸ்கர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!