Home செய்திகள் ஸ்டெர்லைட்: மத்திய சுற்றுசூழல் அதிகாரிகள் குழு ஆய்வு..

ஸ்டெர்லைட்: மத்திய சுற்றுசூழல் அதிகாரிகள் குழு ஆய்வு..

by ஆசிரியர்

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில்  ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இரண்டாவது காப்பர் ஆலை அமைக்க சட்டவிரோதமாக நிலம் வழங்கியமைக்கு நடவடிக்கை எடுக்க  கோரி நெல்லையை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் சென்னை அலுவலகம் குழு அமைத்து சம்பவ பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பகுதியில் மத்திய சுற்றுச்சூழல் துறை இயக்குநர் கலியபெருமாள் தலைமையிலான குழுவினர்  ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வாளர் பிரிஜிலால், மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிப்காட் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com