Home செய்திகள் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு..

by ஆசிரியர்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அவசர கூட்டம் இன்று (25.04.2019) திருவாரூர் மாவட்டம் லுக்கா கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் கிராமத்தில் நடைப்பெற்றது.

மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், ஒன்றிய செயலாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலமுமுகன், கோட்டூர் இராவணன், உயர்மட்டக் குழு உறுப்பினர் கச்சனம் ரவி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

10 ஊராட்சிகளை சேர்ந்த அமமுக ஒன்றிய செயலாளர் பி.சேகர், திமுக இராஜேந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் :

1) ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை செயல்படுத்திடுக..

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு சென்னை தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் ONGC பேரழிவை ஏற்ப்படுத்தும் ஹைட்ரோ கார்பன், பாறை, மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிராக தொடர்ந்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் திரு வைகோ, முன்னாள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சிவ.இராகசேகரன் ஆகியோரின் சிறப்பான வாதத்தால் ONGC நிர்வாகத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ONGC நிர்வாகமும், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசும் கச்சா, நில வாயு மட்டுமே 40 ஆண்டுகளாக 10000 ம் அடி ஆழத்திற்கு கீழ் பாதிப்பில்லாத வகையில் எடுத்து வருவதாகவும், பெரியகுடி, விக்கிரபாண்டியம் பகுதிகள் உள்ளிட்ட காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளித்ததின் பேரில் தடை நீக்கப்பட்டது.

மேலும் பேரழிவு திட்டங்களுக்கு காவிரி டெல்டாவில் நிரந்தர தடை விதித்து தீர்ப்பாயம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் ONGC நிர்வாகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தற்போது மத்திய அரசிடம் மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது தீர்ப்பாய தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

எனவே மத்திய, மாநில அரசுகள் ONGC, வேதாந்தா நிறுவனங்கள் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆய்விற்கோ, எடுப்பதற்கோ முழுதடைவிதித்திட வலியுறுத்துகிறோம்.

2) முன்னால் முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள் விதித்துள்ள தடையை அவமதிக்காதே..

காவிரி டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களில் பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பேரழிவை ஏற்படுத்தும் எரி வாயு எடுக்கும் திட்டங்கள் செயல்படுத்துவதற்கும், வெடி வெடிக்க செய்து நிலத்தடியில் ஆய்வு செய்வதற்கும் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. அதனை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு அவமதிக்காமல் கண்டிப்புடன் பின்பற்றிட வேண்டுகிறோம்.

3) பெரியகுடி ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்திடுக..

ONGC நிர்வாகம் பெரியகுடியை தலைமையிடமாக கொண்டு விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, சேந்தமங்கலம், கோட்டூர், புழுதுகுடி, ஆலாத்தூர், மாவட்டக்குடி, பள்ளிவர்த்தி, தண்ணீர்குண்ணம், 57, குலமானிக்கம் ஊராசிகள் உள்ளிட்ட காவிரி டெல்டாவில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்து அனுமதி பெற்றுள்ளது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் விளைநிலங்கள், நிலத்தடிநீர் முற்றிலும் அபகரிக்கப்படும். குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு பாலைவனமாக மாறும், வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக மக்கள் வெளியேற்றப்படுவார்கள் எனவே அத்திட்டத்திற்க்கான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

4)நிலம் கொடா இயக்கம் துவக்கம்

சென்னை – சேலம் 8 வழிச்சாலை, சேலம் மாவட்டப் பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தியது தவறு என தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்து திட்டங்களுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

ஒரு குலி நிலம் கூட விவசாயிகள் ஒப்புதலின்றி எந்தவொரு மாற்றுத் திட்டங்களுக்கும் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்பது மத்திய அரசு சட்டம் என்பதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் பெரியகுடி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் நிலம் அளிப்பது இல்லை என உறுதியேற்பது. இதனை உறுதி படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் நிலம் கொடா இயக்கம் துவங்கி உறுதியுடன் ஒன்றுபட்டு போராடுவது என தீர்மானிக்க்கப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றபட்டது. போராட்டக் குழு கவுரவ தலைவராக முஹம்மது ஹனிபா, தலைவராக எம்.செந்தில்குமார், செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக பாலு,, துணை தலைவராக எஸ்.சங்கர், துணை செயலாளராக ரமேஷ் கொண்ட போராட்டக்குழு அமைத்து செயல்பபட முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:

ONGC தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் பேராபத்து ஏற்படுத்தும் நாங்கள் எடுக்க மாட்டோம் என 2016ல் கொடுத்த வாக்குறுதியை மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளளதை வன்மையாக கண்டிக்கிறேன்.ONGC மீது அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்களை வரும் மே 2ம் தேதி நேரில் சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவேன்.

கிராமங்கள் தோறும் நிலம் கொடா இயக்கம் துவங்கி ONGC க்கு நிலம் அளிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த உள்ளோம் என்றார். அப்போது செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தார்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com