Home செய்திகள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் மீதான வழக்கு;உண்மைக்கு புறம்பானது:-மாநிலப் பொதுச் செயலாளர், நிஜாம் முகைதீன்!

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் மீதான வழக்கு;உண்மைக்கு புறம்பானது:-மாநிலப் பொதுச் செயலாளர், நிஜாம் முகைதீன்!

by Askar

 எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் மீதான வழக்கு;உண்மைக்கு புறம்பானது:-மாநிலப் பொதுச் செயலாளர், நிஜாம் முகைதீன்!

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உட்பட 8 பேர் மீது போலி இ-பாஸ் பெற்று திண்டுக்கல் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. போலி இ-பாஸ் என்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு முரணானது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறை அதிகாரிகளால் உள்நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்தியில் மாநிலத் தலைவரின் தந்தை திண்டுக்கலில் இறந்ததாக கூறி போலி சான்றிதழ் தயாரித்ததாக கூறப்பட்டுள்ளது.ஆனால் அவரது தந்தை இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.

உண்மை என்னவெனில் திண்டுக்கலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரின் தாயார் சில தினங்களுக்கு முன்பாக இறந்துவிட, அவரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வருவதற்காகவே மட்டுமே மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர் அகமது நவவி உட்பட நிர்வாகிகள் கடந்த 04 |06| 2020 அன்று காலை நெல்லையிலிருந்து திண்டுக்கலுக்கு சென்றுவிட்டு அன்று மாலையே நெல்லை திரும்பினர். திண்டுக்கல் சென்ற நிர்வாகிகள் அனைவரும் முறைப்படி ஆன்லைன் ஏஜன்ட் மூலமாக இ-பாஸ் பெற்றுக்கொண்டு, முறைப்படி அத்துனை சோதனைச் சாவடிகளிலும் பதிவுசெய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு சென்றுவந்தார்கள் என்பது தான் உண்மை. இதில் எந்த முறைகேடுகளும் இல்லை.

வழங்கப்பட்ட இ-பாஸிற்கு முறையாக அனைவருக்கும் ஆதார் ஆவணம் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆதார் என்பது ஒருவரின் முழு தகவல்களும் அடங்கிய ஆவணமாகும். எனவே, போலி சான்று தயாரித்ததாக சொல்லப்படும் செய்தி தவறானது. போலி இ-பாஸ் எடுத்துதான் திண்டுக்கலுக்கு சென்று வரவேண்டும் என்கிற அவசியமும் இல்லை, நாங்கள் அப்படிபட்டவர்களும் இல்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சி என்பது முழுக்க முழுக்க சட்டத்திற்கு உட்பட்டு தங்களின் செல்பாடுகளை அமைத்துக்கொண்ட கட்சியாகும். எனவே இந்த வழக்கு முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பதியப்பட்டதாகும்.

ஆகவே, தமிழக அரசு இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். உள்நோக்கோடு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

நிஜாம் முகைதீன், மாநில பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ. கட்சி, தமிழ்நாடு.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!