Home செய்திகள் முப்பதாவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் : S.P. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார் ..

முப்பதாவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் : S.P. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார் ..

by ஆசிரியர்

முப்பதாவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை தூத்துக்குடி S.P. முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி நூற்றாண்டு அரிமா சங்கம் ஜே சி ஐ பியர்ல்சிட்டி, மற்றும் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக முப்பதாவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி முன்பிருந்து புறப்பட்ட மினி மாரத்தான் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். மினி மாரத்தான் ஒட்டம் தூத்துக்குடி தருவை மைதானம் வந்தடைந்து நிறைவு பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றி பரிசு வழங்கினார். நூற்றாண்டு அரிமா சங்கம், ஜே. சி.ஐ.பியர்ல் சிட்டி மற்றும் தூத்துக்குடி ரோட்டரி சங்க தலைவர், மற்றும் உறுப்பினர்கள், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ஜென்சி காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் சிசில், உதவி ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!