Home செய்திகள் தந்தை, மகனை வெட்டிய கும்பலை கைது செய்யக் கோரி பாம்பனில் மறியல் : 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு..

தந்தை, மகனை வெட்டிய கும்பலை கைது செய்யக் கோரி பாம்பனில் மறியல் : 30 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சூசையர்பட்டினம் (மேற்கு) மீனவர் ஜெயபாலன் 52, இவரது மகன் ராகுல் 33. இருவரையும் முன்விரோதம் காரணமாக நான்கு பேர் ஏப்.26ல் வெட்டிக் கொல்ல முயன்றனர்.

இதனையடுத்து தப்பிச் சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் பாதிக்கப்பட்ட ஜெயபாலன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாசை பாம்பன் பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. குற்றவாளிகளை கைது செய்யும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை ராகுல் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் , இன்ஸ்பெக்டர் மாய ராஜலட்சுமி உறுதியளித்தனர். இதனையடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!