Home செய்திகள் சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்; காவல் துறையினர் பாராட்டு.

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்; காவல் துறையினர் பாராட்டு.

by Abubakker Sithik

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு.

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நற்செயலை காவல்துறையினர் பாராட்டினர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார் (40) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து பார்த்தபோது, அதில் 8 கிராம் கம்மல் இருந்துள்ளது. இதனை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்தார்.

பின் மணிபர்ஸ் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த சிறுக்கன்குறிச்சி, மேட்டு தெருவை சேர்ந்த உச்சிமகாளி(45) என்பவரின் மணிபர்ஸ் என்பது தெரியவந்தது. பின் மணிபர்ஸை தவற விட்ட உச்சிமாகாளியை காவல் நிலையம் வரவழைத்து, ஆறுமுக நயினார் முன்னிலையில் உதவி ஆய்வாளர் முகைதீன் மீரான் தகுந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி மணிபர்ஸை உரிய முறையில் ஒப்படைத்தார். கீழே கிடந்த மணி பர்ஸை உரிய நபரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த ஆறுமுக நயினாரின் நற்செயலை கண்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!