Home செய்திகள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள C- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி கண்டுபிடித்துள்ள மதுரை இளம் பொறியாளர்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள C- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி கண்டுபிடித்துள்ள மதுரை இளம் பொறியாளர்.

by mohan

.தற்போது கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது உலகையே அச்சுறுத்தும் இந்த தொற்று பரவாமல் தடுக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் முகம் கவசம் அணிந்து கொள்வது வெளியே செல்லாமல் இருப்பது கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சமுதாய இடைவெளியையும் பின்பற்றி வருகிறோம்..

இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் முக கவசம் கையுறைகள் போன்றதை பயன்படுத்துவதனால் இதனுடைய விலை அதிகரித்து காணப்பட்டது மேலும் தட்டுப்பாடும் ஏற்பட்டது.இந்நிலையில் மதுரையை சேர்ந்த இளம் பொறியாளர் சுந்தரேஸ்வரன்  தனது முயற்சியால் கிருமிநாசினி மின்சாரத்தை பயன்படுத்தி C ரே கதிர் வீச்சின் மூலம் எவ்வாறு சுத்த பெறுவது சுத்தப்படுத்துவது என்ற முயற்சியில் ஈடுபட்டார் .அதன் தொடர்ச்சியாக இந்த கிருமி நாசினி கருவி சுத்தப்படுத்தும் இதற்கு இசட் பாக்ஸ் என பெயர் வைத்து வடிவமைத்துள்ளார்.மதுரையை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரன் பொறியாளராக உள்ளார்.

இந்த கிருமிநாசினி c-ray பாக்ஸ் மூலம் நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களையும் எவ்வித பாதிப்பும் இன்றி கிருமிகளை சாகடித்து மறுசுழற்சி செய்துகொள்ளலாம் ஒரு பொருளை எத்தனை தடவை வேண்டுமானாலும் மறுசுழற்சி செய்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது.இதன் காலஅளவு 3 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரையில் இருக்கும்.

மேலும் இந்த C-ray கதிர்வீச்சு என்பது அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தக் கூடியதாகவும் மருத்துவமனைகள் மக்கள் கூடும் இடங்களில் வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையாக தயாரிக்கப்பட்டுள்ளது இந்த c-ray கதிர்வீச்சு மூலம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் இவர்.தற்போது இவர் வடிவமைத்துள்ள இந்த பாக்ஸ் அடக்க மதிப்பு ரூபாய் 5000 ரூபாய் வருகிறது ரூபாய் இதனை எந்தவித லாப நோக்கமும் இன்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுப்பதே தனது இலக்காகும் நோக்கம். என்றும் தெரிவிக்கிறார் மேலும் இது குறித்து மத்திய மாநில சுகாதார துறையினரிடம் பயன் பாட்டுக்கு எடுத்து கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் துறையினரிடம தெரிவித்துள்ளார்.

இதற்கான மின்சாரம் பயன்பாடு என்பது மாதம் 10 யூனிட் என்ற அளவிலே இருக்கும் என்பது இதன் சிறப்பு..மேலும் இதில் கிருமிநாசினி சரியாக செயல்படுகிறதா என்பது மருத்துவ. கூட ஆய்வு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com