Home செய்திகள் தமிழக முதல்வருக்கு நன்றி கூறி 5 மணி நேரம் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதனை.

தமிழக முதல்வருக்கு நன்றி கூறி 5 மணி நேரம் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதனை.

by mohan

 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரத்தில் அவனி சிலம்பட்ட அறக்கட்டளை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம் கற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசுப்பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்து தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது.அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவனியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 43 சிலம்ப மாணவர்கள் சேர்ந்து தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாமல் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி மேற்கொண்டனர். மேலும் இந்த சாதனையானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு பயிற்ச்சியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து கூறிய சிலம்ப ஆசான் அறிவானந்தம் கூறுகையில்:நாற்பத்தி மூன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து மணி நேரம் இடைவிடாமல் ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்காக முயற்சி எடுத்து வருகிறோம். 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பாட்டத்தையும் சேர்த்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும். மேலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர்களின் உடல் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறினார். இதைத் தொடர்ந்து விரைவில் 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி முயற்சிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!