Home செய்திகள் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் மூலம் கூட்டாக கல்லா கட்டும் வருவாய்த்துறை மற்றும் இ சேவை மைய ஊழியர்கள்.

தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் மூலம் கூட்டாக கல்லா கட்டும் வருவாய்த்துறை மற்றும் இ சேவை மைய ஊழியர்கள்.

by mohan

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இ சேவை மையங்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு கிடைக்கும் ஒரே பதில் நெட் இல்லை சிஸ்டம் ஸ்லவ் உள்ளிட்ட பதில்கள் மட்டுமே இதில் இரண்டு மூன்று முறை அலைக்களிப்படும் பயணாளிகள் வேறு வழியின்றி இ சேவை மைய அலுவலர்களிடம் தீர்வு கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் வெளியே உள்ள நெட் செண்டருக்கு செல்லும்படி கூறுவார்கள். இ சேவை மைய அலுவலர்களுக்கும் தனியார் நெட் செண்டர் உரிமையாளர்களுக்கும் ரகசிய உடன்படிக்கை. மாதம் மாதம் கமிஷன். இதைவிட இன்னொரு முறைகேடும் இ சேவை மையம் மூலம் அரங்கேறுகிறது. அதாவது கிராமப்பகுதிகளில் இருந்து பட்டா மாறுதல், பட்டா கோருதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் அதிகமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இதற்கு இ சேவை மைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி, சர்வேயர் ஆகியோருடன் ரகசிய கூட்டு. இ சேவை மையத்தில் ஒருவர் பதிவு செய்தால் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அந்த விண்ணப்பத்திற்க்கான கோரிக்கை சரி செய்யப்பட வேண்டும். எனவே இதில் உள்ள ஊழியர்களுக்கான வருவாய்(லஞ்சம்) பெற வாய்ப்பு இல்லாததால் இ சேவை மையத்திற்க்கு வரும் பொதுமக்கள் மீண்டும் கிராம நிர்வாக அலுவலர் அல்லது தலையாரியிடமே திருப்ப அனுப்பபடுவார்கள். அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறை ஊழியர்கள் இ சேவை மையத்திற்க்கு வந்து விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வார்கள். இதற்கு பொதுமக்களிடம் தனியாக சேவை கட்டணம் என்ற பெயரில் வருவாய்த்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொள்வார்கள். பொதுமக்களுக்கு வேலை செய்யாத இ சேவை மைய நெட் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மட்டும் வேலை செய்யும் இதில் இ சேவை மையத்திற்க்கும் பங்கு செல்லும். இவ்வாறு இ சேவை மையத்திற்க்கு வரும் பொதுமக்கள் பல்வேறு வழிகளில் அலைக்கழிக்கப்படுவதோடு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பட்டா விண்ணப்பம், மாறுதல் ஆகியவற்றிற்கு ரூபாய்.7000 முதல் 15000/- வரை லஞ்சம் பெறப்படுகிறது. வாரிசு சான்றிதழுக்கு ரூபாய்.3000 முதல் 7000 வரை பெறப்படுகிறது.முந்தைய அரசு இதன் மீது கவனம் செலுத்தவில்லை. தற்போதைய அரசாவது இதன் மீது கவனம் செலுத்தி அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் லஞ்சம் இல்லாமல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com