Home செய்திகள் ஒரு வாரம் கடந்த நிலையிலும் பைக்காரா பகுதியிலுள்ள நகர்புற சுகாதாரநிலையத்தில் பாதுகாப்பற்ற சூழலில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்கள்

ஒரு வாரம் கடந்த நிலையிலும் பைக்காரா பகுதியிலுள்ள நகர்புற சுகாதாரநிலையத்தில் பாதுகாப்பற்ற சூழலில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்கள்

by mohan

கடந்த வாரம் நமது சத்திய பாதை மாத இதழ் கீழைநியூஸ் இணையதளத்தில் கர்ப்பிணி பெண்கள் தலையில் அமர வைப்பதாக புகார் எழுந்ததையடுத்து ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தோம் .மதுரை பைக்காரா முத்துராமலிங்க புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மாதாந்திர மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகைதரும்போது போதிய இருக்கைகள் இல்லாத நிலையில் கர்ப்பிணி தாய்மார்களை தரையில் அமர வைத்துள்ளனர்.இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானதோடு , சமூகவலைதளங்களிலும் வீடியோ வெளியானதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியபின்னர் கர்ப்பிணி பெண்களுக்கான இரு இருக்கைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து பரிசோதனை முடிந்து மருத்துவ ஆலோசனை பெறுவதற்காகஒரே அறையில் கூட்டமாக அமரவைக்கப்பட்டுள்ளனர்.கொரொண தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுஇதேபோல் கர்ப்பிணி பெண்கள் நடந்துசெல்ல முடியாத அளவிற்கு மருத்துவமனைகள் தரை முழுவதிலும் சேதமடைந்துள்ளது. ‘ எந்தவித அடிப்படை வசதியின்றி இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கொரோனா தொற்று பரவல் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில் பாதுகாப்பாக கண்காணிப்பில் இருக்க வேண்டிய கர்ப்பிணி பெண்களுக்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தராத நிலையில் அவர்கள் முக கவசம் இன்றியும், சமூக. இடைவெளியின்றியும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் அங்கு சிகிச்சைக்கு வந்த பெண் அளித்த பேட்டியில்.. சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழங்காநத்தம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வந்தது அதை முற்றிலுமாக மூடிவிட்டார்கள் அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பழங்காநத்தம் மாடக்குளம் பசும்பொன் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம கர்ப்பிணி பெண்கள் இங்கு சிகிச்சை பெற்று ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர் இதனால் பைக்காரா பகுதியில் கூட்டத்தை இங்கு தவிர்க்கலாம்…. மேலும் இங்கு ரத்தப் பரிசோதனை நிலையம் இங்கு இல்லாத காரணத்தினால் வெளியே சென்று தனியார் ரத்த பரிசோதனை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது… விடுகிறது ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஆரம்ப சுகாதார நிலையம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது..இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய வசதிகளை ஏற்படுத்தி்தர வேண்டும் மற்றும் பழங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறப்பதற்கான உரிய ஆவணம் செய்ய வேண்டும் என என்ற கோரிக்கை வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!