Home செய்திகள் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளி கொண்டு வர சிபிஐ விசாரனை செய்ய வேண்டும் -வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளி கொண்டு வர சிபிஐ விசாரனை செய்ய வேண்டும் -வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்

by mohan

மதுரை காளவாசல் பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் விசாரிக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள்ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனை ரத்து செய்து சிபிஐயிடம் வழக்கு விசாரணையை ஒப்படைக்க உத்திரவிட வேண்டும் எனவும்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து உரிய நடவடிக்கை முதல்வர் மேற் கொள்ள வேண்டும் எனவும்,தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் சீர்மரபினர்களைடி என் சி -யில் இருந்து டி.என்.டி பிரிவினராக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதல் வருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கொரோனா நிவாரண நிதி அளிக்க கேட்டு கொண்டதன் அடிப்படையில் தனது மகன் படிப்பு செலவிற்காகவும் மகள் திருமணத்திற்காக வும் சேர்த்து வைத்திருந்த 10 லட்ச ரூபாயை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!