Home செய்திகள் வருடாந்திர கணக்கெடுப்பு கூட்டம்

மதுரை மாநகர் மேற்கு மேஸ்திரி வீதியில் அமைந்துள்ள ரத்னா உணவக அரங்கத்தில் நடைபெற்ற தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடப்பு சுற்றில் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASUSE) அக்டோபர்-2019 முதல் மார்ச்-2020 வரை நடைபெறுகின்றது. அடுத்த சுற்று 2020 ஏப்ரல் முதல் தொடங்கப்படும் இந்தக் கணக்கெடுப்பு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பிற சேவைத்துறைகள், வேளாண்மை அல்லாத நிறுவனங்களின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு பண்புகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்சியில் மதுரை தேசிய புள்ளியியல் மண்டலத்தின் தலைமை அலுவலர் ரெத்தினம் கலந்துகொண்டு தொழில் நிறுவனங்கள் அரசின் திட்டங்களுக்கு தேவையான புள்ளி விபரங்களை களப்பணியாளர்களுக்கு சரியான முறையில் தந்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!