Home செய்திகள் கொரொண தோற்று இரண்டாம் அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வெறிச்சோடிய சாலைகள்

கொரொண தோற்று இரண்டாம் அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வெறிச்சோடிய சாலைகள்

by mohan

கொரொண தோற்று இரண்டாம் அலை காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு அளவிலான ஊரடங்கு ஆனது அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது நேற்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது அத்தியாவசியமான பொருட்கள் பால் மற்றும் மருந்துகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் காய்கறி கடைகள் மட்டும் மதியம் ஒரு மணிவரை அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தனர் மேலும் இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமணத்துக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் சென்று வர அனுமதி அளித்துள்ளனர் தேவையின்றி வாகனத்தில் சுற்றுவார்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையில் தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரையில் பல்வேறு பகுதிகள் சாலையில் வாகனம் ஏதும் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பாக கோரிப்பாளையம் மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் பழங்காநத்தம் காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஏதும் செல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையில் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான சூழ்நிலையை காணப்பட்டது இதேபோன்றுதிருப்பரங்குன்றம் பகுதியில் சுமார் 3000க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டு முழு ஊரடங்குகாவல்துறை சார்பில் 6 சோதனை சாவடிகள் மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்பு கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த சில நாட்களாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன, .ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சூழலில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்வி பட்டி., அவனியாபுரம், வில்லாபுரம் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், சந்தை பகுதி, சிறுகுறு கடைகள் என சுமார் 3000க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஆட்டோ, வாடகை கார் மற்றும் வேன்களும் முழுமையாக இயங்கவில்லை காவல் உதவி ஆணையர் சண்முகம் தலைமையிலான போலீஸார், மற்றும் போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம் என்றும் வெளியில் சுற்றும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!