Home செய்திகள் முக கவசம் கட்டாயம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.200 அபராதம்

முக கவசம் கட்டாயம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு ரூ.200 அபராதம்

by mohan

மதுரை மாவட்டத்தில் கோவிட் -19 தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இந்த கொரோனா ( கோவிட் -19 ) நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு 01.06.2020 முதல் 30.06.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது . மேலும் அரசு அறிவுறுத்தியுள்ளபடி பொது இடங்கள் / பணி புரியும் இடங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் , மேலும் முகக்கவசம் அணியாத 16,624 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இதுவரை ( 15.06.2020 ) ரூ 16,62200 / – வசூல் செய்யப்பட்டுள்ளது . தற்போது நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் , பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும் , முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமானது 16.06.2020 முதல் ரூ 200 / – வீதம் விதிக்கப்படும் என்றும் , மேலும் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலும் , பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பினை பயன்படுத்தி கை கழுவுவதையும் , பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாது கடைபிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் .டி.ஜி.வினய் . உத்தரவு.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com