Home செய்திகள் உசிலம்பட்டி பகுதியில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக முக கவசம் அணிந்து கொண்டே மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள்

உசிலம்பட்டி பகுதியில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக முக கவசம் அணிந்து கொண்டே மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள்

by mohan

உசிலம்பட்டி பகுதியில் கொரோனா பாதிப்பு எதிரொலியாக முக கவசம் அணிந்து கொண்டே மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள், மஞ்சள் கலந்த நீரில் கை, கால்களை கழுவிய பின்னரே திருமண விழாக்களில் அனுமதியளித்த திருமணவீட்டார் என எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இன்று பத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றனர்.குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் நடைபெறும் இல்ல விழாக்கள் திருவிழா போல வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்

ஆனால் தற்போதைய கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஆரவராமின்றி குறைந்த அளவான உறவினர்களை வைத்தே திருமணங்கள் நடைபெற்றது.இதில் ஒரு சில திருமணங்களில் முக கவசம் அணிந்து கொண்டே மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வரும் அனைவரும் வாசலில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கலந்த நீரால் கை, கால்களை கழுவிய பின்பே திருமணம் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என சில கட்டுப்பாடுகளும் திருமண விட்டார்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!