Home செய்திகள் மதுரையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை; அப்போலோ மருத்துவர்கள் சாதனை..

மதுரையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை; அப்போலோ மருத்துவர்கள் சாதனை..

by Abubakker Sithik

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் மதுரை அப்போலோ மருத்துவர்கள் சாதனை..

மதுரை அப்போலோ மருத்துவமனை தனது பயணத்தில் தொடர்ச்சியாகப் பல வெற்றிப்படிகளைக் கடந்து வருகிறது. அதில் மற்றொரு சிறப்பம்சமாக தற்போது 50க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் மருத்துவத்துறையில் தனது நிபுணத்துவத்தையும் நிலைநாட்டியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக 50க்கும் மேற்பட்டோருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து அவர்களுக்குப் புத்துயிர் அளித்துள்ளது. தென்தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையைக் கொண்டு சேர்ப்பதில் அப்போலோ மருத்துவமனை என்றும் முன்னிலை வகிப்பதையும் இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், இளங்குமரன் கூறுகையில், ”ஒவ்வொரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் ஒரு மனித உயிர்க் காப்பாற்றப்பட்டு அவரின் குடும்பத்திற்கு ஒரு புது நம்பிக்கையை அளிக்கிறது. சிகிச்சைப் பெற வரும் ஒவ்வொரு நபரையும் துல்லியமாக ஆராய்ந்து அவருக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தச் சாதனையானது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் எங்களின் நிபுணத்துவம் தொடர்ச்சியாக மேம்பட்டு வருவதை அறியலாம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று காடவர் டோனார் எனப்படும் இறந்தவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெறப்பட்டு செய்யப்படும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை. மற்றொன்று வாழும் கொடையாளியிடம் தானம் பெற்று செய்யப்படும் அறுவை சிகிச்சை. பொதுவாக கல்லீரலில் இரண்டு பாகங்கள் உண்டு அதில் ஒரு பாகத்தைத் தானமாக எடுத்தாலும் அது மீண்டும் உயிர்ப்பித்து வளரக் கூடிய தன்மையுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

“50க்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் என்பது எண்ணிக்கை சார்ந்த சாதனை என்பதைக் காட்டிலும் அது எங்களின் அதிநவீன வழிமுறைகள் மற்றும் கனிவான சேவையின் வாயிலாகத் தென் தமிழக மக்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. மருத்துவ சேவையின் தரத்திற்கான எல்லையை விரிவுபடுத்துவதிலும் வருங்காலத்தில் தொடர்ச்சியாகப் பல மைல்கல்களை எட்டுவதிலும் அப்போலோ உறுதியுடன் இருக்கிறது. மேலும் தென் தமிழகத்தில மதுரை அப்போலோ மருத்துவமனை கல்லீரல் சிகிச்சைக்குப் பிரத்யேகமான மருத்துவமனை என்று சொல்லிக் கொள்வதில் நங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.” எனக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மதுசூதனன் கூறினார். அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமைச் செயல் இயக்குனர் நீலகண்ணன், மருத்துவ சேவைகள் இணை இயக்குனர் பிரவீன் ராஜன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் இளங்குமரன், மதுசூதனன், குலசேகரன் மயக்கவியல் நிபுணர், கல்லீரல் நிபுணர் குமரகுருபரன் ஆகியோருடன் குடலியல் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் பிரபு, மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோரும் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!